வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (20:16 IST)

முக ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா?

தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது
 
இந்த தீர்ப்பு நிறுத்தப்படவில்லை என்றாலும் வைகோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. இருப்பினும் தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் தார்மீக அடிப்படையில் எம்பி ஆவது சரியா? என ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தலைமை செயலகத்தில் இருக்கும் திமுக அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலினை வைகோ  சந்திக்கவிருப்பதாகவும், அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு ராஜ்யசபா தேர்தலுக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
திமுக தலைவரை முதல்வராக்குவேன் என்று சபதமிட்ட வைகோ, திமுகவின் உதவியால் ராஜ்யசபா எம்பியாக உள்ள வைகோ, எதற்காக தனிக்கட்சி நடத்த வேண்டும்? என்றும், பேசாமல் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்துவிடலாமே என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.