புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (14:37 IST)

எனக்குதான் சீட்…மதிமுகவுக்கு இல்லை – வைகோ சமாதானம்!

வைகோ ராஜ்யசபா உறுப்பினராவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதால் திமுக தனது அடுத்தகட்ட நகர்வாக என் ஆர் இளங்கோவனைக் களமிறக்கியுள்ளது.

திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. இருப்பினும் தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் தார்மீக அடிப்படையில் எம்பி ஆவது சரியா? என ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலம் வைகோவின் மனுவை நிராகரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி எதுவும் நடந்தால் அதற்குத் தயாராக இருக்க திமுக நினைக்கிறதாம். திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, திமுக சார்பாக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து மதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தி அடையக்கூடாது என வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அதில் ‘நான் எம்.பி. ஆவதாக இருந்தால்தான் மதிமுகவுக்கு சீட் என திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்பந்தத்தின் போது கூறினார். அதனால் இப்போது நான் எம்பி ஆவதில் சிக்கல் இருப்பதால் ஸ்டாலினை மாற்று ஏற்பாடு செய்யக் கூறினேன் ‘எனக் கூறி மதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.