புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (18:21 IST)

வைகோ கூட்டணியை உடைக்கக்கூடாது – அமைதியாக போன கே.எஸ்.அழகிரி

வைகோ- கே.எஸ்.அழகிரி இடையே கடும் வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி

“வைகோவிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பகையும் இல்லை. அவரது பேச்சின் மீது எனக்கு எப்போதும் தனி விருப்பம் உண்டு.

வைகோவை தமிழரே இல்லை என்று சீமான் பேசியபோது அதை எதிர்த்தவன் நான். காஷ்மீர் விவகாரத்தை பற்றி பேச ஒதுக்கிய நேரத்தில் காங்கிரஸை குறித்து வைகோ பேசியது ஏன்?

இன்று காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதர்கு முக்கிய காரணம் நேரு. ஆனால் வைகோ மோடியை புகழ்ந்து பேசுகிறார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் என்ன தவறு செய்தது என்று வைகோ கூறினால் நான் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

ஸ்டாலின் உருவாக்கிய இந்த அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால் வைகோ- கே.எஸ். அழகிரி பிரச்சினையில் மெல்ல அமைதிநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுடைய இரு கூட்டணி கட்சிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில் திமுக இதுகுறித்து எதுவும் பேசாமல் இருப்பது அரசியல் ஆர்வலர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.