ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (18:31 IST)

வாக்கெடுப்பில் பங்கேற்காதது தமிழர்களுக்கு செய்த துரோகம்: வைகோ ஆவேசம்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் குற்றம் செய்ததாக இலங்கை மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் இன்று ஐநாவில் சோதனை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன
 
ஆனால் இன்று நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா வெளியேறியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன 
குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறியபோது ’வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது ஈழத்தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்றும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தில் இந்தியா ஆதரவு அளிக்காதது தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

இந்தநிலையில் போர்க்குற்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது