கையிருப்பில் தடுப்பூசிகள்: துவங்கியது தடுப்பூசி போடும் பணிகள்!
தற்போது தமிழ்நாட்டில் 1,74,730 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு எதிர்பார்த்த அளவிலான தடுப்பூசிகள் ஒதுக்கப்படாத காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இயங்கக்கூடிய தடுப்பூசி மையங்களில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது.
பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப செல்லக்கூடிய நிலை என்பது இருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது 1,74,730 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதனால் தடையின்றி தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.