வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 அக்டோபர் 2020 (15:07 IST)

பொதிகை சேனலில் வேலை வாய்ப்பு… வெளியான அறிவிப்பு!

இந்திய பொதுத்துறை ஒளிபரப்பு சேவை நிறுவனமான தூர்தர்ஷனின் சென்னை பிரிவில் காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமைந்துள்ள தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலைய செய்திபிரிவில் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்ய காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆகிய பணிகளுக்காக https://doordarshan.gov.in/ddpodhigai என்ற முகவரியில் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து  அதைப் பூர்த்தி செய்து இயக்குநர்(செய்தி), மண்டல செய்திப்பிரிவு, பொதிகை தொலைக்காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.