ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (11:31 IST)

கிடு கிடு என உயரும் தங்கத்தின் விலை: கிறுகிறுக்கும் மிடில் க்ளாஸ்!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. 
 
தங்கத்தின் விலை குறையுமா குறையுமா என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கிடு கிடு என தங்கத்தின் விலை உயர்ந்துக்கொண்டே வருகிறது. 
 
ஆம், ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்திலும் அதே நிலைத்தான் தொடர்கிறது. அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 
அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.49.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 200 அதிகரித்து ரூ.49,600 விற்கப்படுகிறது.