சிஸ்டம் மாற வேண்டும். ரஜினியின் கருத்தை முன்மொழிந்த வருண்காந்தி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்தபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார். ரஜினி கூறிய இந்த ஒரே ஒரு வரி தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்காத அரசியல் தலைவர்களே இல்லை எனலாம்
இந்த நிலையில் இதே கருத்தை பாஜக பிரமுகரும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தி எம்பி கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார். இன்று கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கில் பேசிய வருண்காந்தி, 'அரசியல் சிஸ்டம் மாறாவிட்டால் எதுவுமே மாறாது. இதற்கு தீர்வு காண வேண்டிய கடமை இளைஞர்களின் கையில் உள்ளது என்று கூறினார். வருண்காந்தி சிஸ்டம் குறித்து கூறியதும் மாணவர்கள் தங்கள் கரகோஷைத்தை எழுப்பினர்
மேலும் வருண்காந்தி கூறியபோது, 'மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கல்லூரிகள் செயல்பட வேண்டும் செயலப்ட வேண்டும் என்றும் புத்தகங்களை தாண்டி இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.