திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (01:17 IST)

பெண்களின் உள்ளாடைகளை திருடும் ஆசாமி

முசிறி பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை திருடும் சைக்கோ நபரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 


 
முசிறி பகுதியில் சில வீடுகளில் பெண்கள் துணிகளை துவைத்து வீட்டின் பின்புறம் காயப்போடும் துணிகள் அடிக்கடி காணாமல்போகிறது. குறிப்பாக பெண்கள் அணியும் உள்ளாடைகள் காணாமல் போவது பற்றி பெண்கள் மிகவும் பதட்டம் அடைந்து வருகின்றனர். 
 
பெண்களின் துணிகள் காணாமல் போவதால் அதை எடுத்து செல்பவர் பெண்களை மயக்கும் வகையில் ஏதேனும் மந்திரவாதிகள் மூலமாக பில்லி, சூனியம் செய்து பெண்களை வசியம் செய்வதற்காக எடுத்து செல்கின்றனரா எனவும், பெண்களின் மேல் மோகம் கொண்ட சைக்கோ வாலிபர் பெண்களின் உள்ளாடைகளை திருடி சென்றுள்ளாரா எனவும், பெண்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். 
 
முசிறியில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் யாரும் இல்லாத வீட்டில் ஏறி குதித்து பெண்களின் உள்ளாடைகளை தான் கொண்டு வந்த பைகளில் எடுத்து செல்லும் காட்சிகளும் சில வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. 
 
இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினர் அந்த மர்ம ஆசாமியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.