ஒரு கிலோ ரூ.1 கூட இல்லை.. 5 டன் வெண்டைக்காயை குளத்தில் கொட்டிய விவசாயி..!
ஒரு கிலோ வெண்டைக்காய் மார்க்கெட்டில் ஒரு ரூபாய்க்கு கூட எடுக்க ஆளில்லாததை அடுத்து விரக்தி அடைந்த விவசாய ஒருவர் தான் கொண்டு வந்த ஐந்து டன் வெண்டைக்காயை குளத்தில் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த சில நாட்கள் ஆகவே காய்கறி விலைகள் மிகவும் மலிவாக விற்பனையாகி வருகிறது என்பதும் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் வரை முதல் 15 ரூபாய் வரை தான் விற்பனையாகிறது.
அதேபோல் மற்ற காய்கறி விலையும் குறைந்துள்ள நிலையில் வெண்டைக்காய் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் ஐந்து டன் வெண்டைக்காயை விவசாயி ஒருவர் கொண்டு வந்த நிலையில் அதை ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாமல் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் அருகில் உள்ள குளத்தில் வண்டியை நிறுத்தி அதில் அனைத்து வெண்டைக்காயையும் கொட்டியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Siva