வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (11:33 IST)

பசங்களா எல்லாரும் நல்லா படிக்கணும்..! – இனிப்பு கொடுத்து வாழ்த்திய உதயநிதி!

இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இனிப்பு கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 600 நாட்கள் கழித்து தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு பல இடங்களில் ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்தியுள்ளனர்.