1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (10:44 IST)

அன்பழகன் படத்திறப்பு விழா உதயநிதி விஷீவல்

ஜெ. அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. 

 
மறைந்த முன்னாள் கழக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
தொடர்ந்து ஜெ.அன்பழகன் அறக்கட்டளையை தொடங்கி வைத்து, 24 மணி நேர இலவச குளிர்சாதன பெட்டி சேவையையும் துவக்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, எழிலன், உள்பட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.