திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (11:12 IST)

நெற்றிக்காசைக் கூட விட்டு வைக்காம கஜானாவை ரொப்பும் அரசு: உதயநிதி சாடல்!

கொரோனாவால் இறப்பவர் குடும்பத்தாரிடம் ரூ.10,000 முதல் 15,000 வரை லஞ்சம் கேட்கிறீர்களா என அரசை சாடியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 
 
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை 444 விடுபட்டுவிட்டதாகவும், அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, கொரோனா மரணங்களை மறைக்காதே என்றால் அய்யோ அரசியல் செய்கிறார்கள் என்ற 420கள் மார்ச் முதல் விடுபட்ட 444 கொரோனா மரணங்களை இன்று சொல்கின்றனர். 
 
இறந்தவர்களின் உடல்களைஅடக்கம் செய்தது யார்? தொற்றேதும் பரவியதா? நீங்கள் அடிக்கடி மாற்றும் எஜமானர்கள் போல மனித உயிரொன்றும் துச்சமில்லை அடிமைகளே என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது மற்றொரு டிவிட்டில் அதிமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். 
 
அதில், கொரோனாவால் இறப்பவர் குடும்பத்தாரிடம் ரூ.10,000 முதல் 15,000 வரை லஞ்சம் கேட்கிறீர்களா என அரசுக்கு எதிராகச் சாட்டை சுழற்றியிருக்கிறது உயர் நீதிமன்றம். பணத்துக்காக 13 அப்பாவிகளைச் சுட்டுக்கொன்ற கூட்டம், கொரோனாவால் மரணிப்போரின் நெற்றிக் காசைக்கூட தன் கஜானாவாகப் பார்ப்பது கேவலம் என விமர்சித்துள்ளார்.