வெற்றி நடையா... வெற்று நடை போடும் தமிழகம்: ஈபிஎஸ்-ஐ கலாய்த்த உதயநிதி!!
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் உதயநிதிக்கு பழனியில் வெள்ளி வேல் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின், 2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசியது. அப்போதே தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற வைத்தீர்கள். அதே போன்ற வெற்றியை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுக்கு வழங்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. வெற்று நடைதான் போடுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் கட்டப்படாமல் உள்ளது.
சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டியில், கூவத்தூரில் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மது ஊற்றிக்கொடுத்தார் என கூறியுள்ளார். இது ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது என பேசியுள்ளார்.