திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (07:22 IST)

மாணவர்களின் கல்வியில் கூட்டு சதி: பாஜக - அதிமுகவை வெளுக்கும் உதயநிதி!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும் என்பதை விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
 
அமைச்சர் செங்கோட்டையன் தனது சமீபத்திய பேட்டியில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும். 2 ஆம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும் என அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆள்மாறாட்ட முறைகேட்டை அடுத்து, நீட் OMR பதில் தாள்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. 10th, +2வில் அதிக மதிப்பெண் எடுத்தவர் கூட நீட்டில் '0' எடுப்பது எப்படி? திறமை-தகுதி இருந்தாலும் யார் மருத்துவராக வேண்டும் என்பதை வெளியில் இருக்கும் சிலர் தீர்மானிக்கிறார்களா?
 
இதைக்கேள்வி கேட்காமல் ஒருவருக்கு ஒருமுறை தான் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி தரப்படும் என்கிறது அடிமை அரசு. இது மாணவர்களை தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே. கோச்சிங் செல்ல முடியாத கிராமத்து ஏழை எளிய பிள்ளைகள் ஒதுங்குவர். இதுதான் பாஜக-அதிமுகவின் கூட்டு சதி.