1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (11:35 IST)

சூர்யாதேவி மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு: பரபரப்பு தகவல்

சூர்யாதேவி மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு
வனிதா திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூர்யா தேவி மீது காவல்துறையில் வனிதா புகார் கொடுத்திருந்தார் என்பதும், இந்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி உள்பட ஒரு சிலரின் உதவியால் சூர்யாதேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டதும் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவரை விசாரணை செய்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யாதேவி திடீரென தலைமறைவானார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரி ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தொற்று நோயை பரப்புவவதாக சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சூர்யாதேவி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது