செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (09:41 IST)

கிணற்றில் கிடந்த இரண்டு சிறுமிகளின் சடலம்… மர்ம மரணம்!

செங்கல்பட்டு அருகே விவசாயக் கிணற்றில் இரண்டு சிறுமிகளின் சடலம் கிடந்ததால் பரபரப்பு உருவாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆமைப்பாக்கம் பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி சிறுமிகளான பிரியங்கா(16), செண்பகவள்ளி(11) சடலம் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் மிதந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் உடனடியாக போலிசாருக்கு தகவல் சொல்ல,  சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசரணையும் செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இவை தற்கொலையா அல்லது யாரேனும் பாலியல் வண்கொடுமை செய்து சிறுமிகளை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலிஸார் காத்திருக்கின்றனர்.