1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (18:45 IST)

இரட்டை இலை யாருக்கு? ; ரூ.50 லட்சம் வரை சூதாட்டம் - சென்னையில் அதிர்ச்சி

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பதை வைத்து சென்னையில் சூதாட்டம் நடைபெற்றுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் தரப்பு ஆகியோரின் இன்று டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தங்கள் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர். தேர்தல் கமிஷன் தன்னுடையை முடிவை இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டின் போது மட்டும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தற்போது அரசியல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இரட்டை இலை விவகாரத்தை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 
 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகளின் மீது பலர் லட்சக்கணக்கில் பணம் கட்டியதாக தெரிகிறது. ரூ.50 லட்சம் வரை சூதாட்டம் நடை பெற்றுள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள் எனவும், இதுபற்றிய விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.