டிவிட்டரில் டிரெண்ட் ஆன ‘கள்ளதுப்பாக்கிதிமுக’ ஹேஷ்டேக்...

சனி, 4 ஆகஸ்ட் 2018 (17:47 IST)
மதுரையில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த திமுக முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 5 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 
இதனையடுத்து, டிவிட்டரில் ‘கள்ளதுப்பாக்கிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் இன்று காலை முதலே டிரெண்டிங்கில் இருந்தது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் கருத்து தெரிவித்ததால், ஒருகட்டத்தில் அந்த ஹேஷ்டேக் முதலிடத்திற்கு வந்தது.
 
சமீபத்தில்தான், விருகம்பாக்கம் பகுதியில் திமுக பிரமுகர் யுவராஜ் இலவச பிரியாணிக்காக குத்து சண்டை போட்ட போது “ ஓசிபிரியாணிதிமுக” என்கிற ஹேஷ்டேக் வைரலனாது. இதனால், மு.க.ஸ்டாலின் அந்த உணவகத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறும் நிலை உருவானது. 


 
இந்நிலையில்தான், அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் மற்றொரு திமுக பிரமுகர் சிக்கியுள்ளார். இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments