1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (07:15 IST)

திமுக தொண்டர்கள் ஊருக்கு செல்லலாம்: கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று கருணாநிதி படுக்கையில் இருந்து நாற்காலியில் உட்கார்ந்ததாகவும், அவரது உடல்நிலை முன்னேற்றத்தை கணக்கில் கொண்டால் இன்னும் ஒருசில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் வாசலில் காத்திருக்கின்றனர். கருணாநிதியின் கையசைப்பை பார்த்துவிட்டுத்தான் ஊருக்கு திரும்புவோம் என்று அவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
 
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதால் வெளியூரில் இருந்து சென்னை வந்திருக்கும் திமுக தொண்டர்கள் தைரியமாக ஊருக்கு செல்லலாம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். காவேரி மருத்துவமனை வளாகத்தில் கனிமொழி இதனை கூறியதும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அனேகமாக இன்றுமுதல் திமுக தொண்டர்கள் ஊருக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது