கோ பேக் மோடி vs கம் கம் மோடி – சமூகவலைதளங்களில் போர் !

Updated: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (09:06 IST)
இன்று மதிரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வர இருக்கும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடிக் காட்டப்படும் என்ற அச்சத்தால் பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட இழுபறிகளுக்குப் பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மதுரை மண்டேலா நகரில் நடைபெறுகிறது. இதற்கான இன்று முற்பகல் சிறப்புத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகிறார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கடந்த ஆண்டு மோடி தமிழகம் வந்த போது கருப்புக்கொடி காட்டியும் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்தும் பெரியாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அதுபோல இம்முறையும்  மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராதது, மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு, ஸ்டெர்லைட் மற்றும் பொருளாதார ரீதியிலான 10 % இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி மோடி வருகையின் போது எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக, திவிக, மே 17 மற்றும் பெரியாரிய இயக்கங்கள் அறிவித்துள்ளன.

சென்ற முறை கோபேக் மோடி ட்ரண்ட் ஆனதை அடுத்து இம்முறை முந்திக்கொண்ட தமிழக பாஜகவினர் பிரதமரை வரவேற்கும் விதமாக #MaduraiThanksModi #comecomemodi என்ற ஹாஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பதிவுகள் இட ஆரம்பித்தனர். இது டிரண்ட் ஆகவே மீண்டும் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் ஆக்க ஆரம்பித்தனர். இதனால் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் கோபேக் மோடிக்கும் கம்கம்மோடிக்கும் இடையில் பலத்த போட்டி உருவாகியுள்ளது.

ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே #MaduraiThanksModi #comecomemodi ஐ விட #Gobackmodi இந்திய அளவில் டிரண்ட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் மோடி வருகையின் போது எந்த விதமான விரும்பதகாத நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க மதுரை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சுமார் 5 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

எல்லாம் காட்டு

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

போராட்டக்காரர்களின் கையில் கத்தி, வாள், கட்டைகள்.. இவர்கள் எல்லாம் மாணவர்களா? தேசத்துரோகிகள் ஊடுருவலா?

எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ் லாபம் அடைய முயற்சி... சோனம் வாங்சுக்கின் மனைவி கண்டனம்...

அடுத்த கட்டுரையில்
Show comments