1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (16:00 IST)

பெரியார் குத்து பாடலுக்காக சிம்புவுக்கு விருது ...

'பெரியார் குத்து'  என்னும் பாடலுக்காக நடிகர் சிம்புவுக்கு திராவிடர் கழகம் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் திராவிட கழக தலைவர் வீரமணி தலைமை வீரமணி, மதன் கார்க்கி, சிம்பு, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர்  கலந்து கொண்டனர்.
 
’தனக்கு தன்னம்பிக்கை கொடுத்தத என் அப்பா (டி . ராஜேந்தர் ) தான் என்றும்.மனதில் உள்ளதை பேசலாம் ஆனால் உண்மையாக இருக்க வேண்டுமென்ற தைரியத்தை தமக்கு  பெரியார் தான் கொடுத்ததாகவும்  சிம்பு பேசினார்.
 
பெண்விடுதலைக்காக பெரியார் நிறைய போராடி இருக்கிறார். இப்பாடலில் பெரியார் பாட்டு என்று போடவில்லை. ஏனென்றால் பெரியார் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் குத்து. அதனால் இந்த பாடலுக்கு குத்து என்று பெயர் வைத்தோம் .’ இவ்வாறு பேசினார்.