செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:41 IST)

கைது செய்! கைது செய்! அந்த சாரை கைது செய்! என்ற கோஷங்களுடன் தவெகவினர் ஆர்ப்பாட்டம்..!

TVK Protest

கைது செய்! கைது செய்! அந்த சாரை கைது செய்! என்ற கோஷங்களுடன் தவெகவினர் ஆர்ப்பாட்டம்..!


 

சென்னை அண்ணா பல்கலைக்கழகா மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளானதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்  நடைபெற்று வரும் நிலையில் திமுக அரசையும்,காவல்துறையும் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் மகளிர் அணி சார்பில் சென்னை முகப்பேறு கிழக்கு திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் தவெக மகளிரணியை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடமும்,கல்லூரி பெண்களிடமும்,பேருந்துகளில் ஏறி பயணிகளிடத்திலும் பிராச்சார பிரசுரங்களை வழங்கினர். இதில் சுமார் 20க்கு மேற்பட்ட பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!
 

தலைமை சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் பாலமுருகன் மற்றும் 90வது வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Edit by Prasanth.K