திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2024 (14:35 IST)

தவெக விஜய், ஆளுனர் ரவி சந்திப்பு! வரவேற்று அழைப்பு விடுத்த அண்ணாமலை! - தமிழக அரசியலில் பரபரப்பு!

Annamalai TVK Vijay

பெண்களுக்கு எதிரான வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்ததை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

 

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

 

இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் திரு. விஜய் அவர்களும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்.
 

 

வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Edit by Prasanth.K