வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (16:24 IST)

கொரோனா தொற்றுடன் மருத்துவம் பார்த்தாரா தூத்துகுடி மருத்துவர்? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வந்தது.
 
இதனை கருத்தில் கொண்டு பலர் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சிலர் பரிசோதனைக்கு வராமல் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டணம் என்ற பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியிருந்ததை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்
 
உடனடியாக அந்த மருத்துவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று அவருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். டெல்லியில் இருந்து திரும்பி வந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தும் ஒரு மருத்துவராக இருந்தும் அவர் இதுவரை தன்னை பரிசோதனை செய்யாமல் இருந்தது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது
 
இதனை அடுத்து அவர் யார் யாருக்கெல்லாம் சிகிச்சை செய்தார் என்பது குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது