திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (12:56 IST)

#வெற்றிசின்னம்குக்கர்: அதிரடியை ஆரம்பித்த டிடிவி அண்ட் கோ!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #வெற்றிசின்னம்குக்கர் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாக பெற்றிருக்கும் நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 
 
இந்த பதிவையடுத்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் #வெற்றிசின்னம்குக்கர் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.