ஆசியாவின் சிறந்த ஜூனியர் ஆண்கள் தடகள விளையாட்டு வீரருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!
2023ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஜூனியர் ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த செல்வபிரபுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதலில் செல்வபிரபு தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதையடுத்தே அவருக்கு, ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. வரும் 10ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறும் விழாவில் ஆசிய தடகள சங்கம் செல்வபிரபுவுக்கு விருது வழங்கி கௌரவிக்கவுள்ள இந்த தருணத்தில் அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இந்தியாவின் சார்பில் தடகள விளையாட்டுகளில் மேலும் பல சர்வதேச விருதுகளை செல்வ பிரபு வென்றெடுக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran