1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (14:42 IST)

உங்க பினாமி, பார்ட்னர்ஷிப் கதையெல்லாம் எனக்கு தெரியும்: தினகரன் அதிரடி ஸ்டேட்மெண்ட்!

தமிழக சட்டசபை நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான திமுக எம்எல்ஏக்கள் இல்லாமல் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டு பேசி வருகின்றனர். ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரனும், சட்டசபை விட்டு வெளியேறினார். 
 
தினகரன் அரசை விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் தங்கமணி, அரசை விமர்சனம் செய்தவதற்கு ஒரு தகுதி வேண்டும், சாராய ஆலை அதிபர்களுக்கெல்லாம் அந்தத் தகுதியில்லை என்று தெரிவித்தார்.
 
இதற்கு முன்னர், அமைச்சர் தங்கமணியை டாஸ்மாக் அமைச்சர் என்று தினகரன் கிண்டலடித்த நிலையில் அவருக்கு பதிலடி தரும் வகையில் தினகரனை சாராய ஆலை அதிபர் என்று தங்கமணி மறைமுகமாக விமர்சனம் செய்தார். 
 
இந்நிலையில், தினகரன் இதற்கு பதில் அளித்துள்ளார், மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிப்பது ஏன்? மூடப்பட்டுள்ள 810 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிக்கிறது.
 
மதுக்கடைகளை மேலும் மூடாமல் புதிதாக திறப்பது சரியல்ல. என்னை சராய ஆலை அதிபர் என்கிறார்கள். நான் மது ஆலை எதுவும் நடத்தவில்லை. எங்கள் உறவினர்கள் மது ஆலை நடத்தினால், அதிலிருந்து தமிழக அரசு மது வாங்காமல் புறக்கணிக்க வேண்டியது தானே.
 
யார் யார் எந்தெந்த தொழிற்சாலையில் பினாமி பெயரில் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளனர் என்று எனக்கு தெரியும் என அதிரடி ஸ்டேட்மெண்ட்டை வெளியிட்டுள்ளார்.