1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (00:54 IST)

டெல்லி போலீஸ் சொன்ன தேதியில் ஆஜராக முடியாது. தினகரன்

தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் கைப்பற்றும் நோக்கத்துடன் ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



 


இந்த நிலையில் நேற்று சென்னையில் டிடிவி தினகரன் வீட்டிற்கு வந்த டெல்லி போலீசார் வரும் சனிக்கிழமை டெல்லியில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்து சென்றனர். இதனால் தினகரன் சனியன்று டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி போலீசார் சொன்ன தேதியில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் டெல்லி காவல்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்'றும் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை டெல்லி போலீசார் ஏற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து நாளை தெரியவரும்.