1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 27 டிசம்பர் 2021 (16:52 IST)

உதயநிதி கூட்டிய கூட்டத்தில் ஒமிக்ரான் பரவாதா? டிடிவி கேள்வி!

காவல்துறை உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என டிடிவி கேள்வி. 

 
திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.
 
இந்நிலையில் இதனை டிடிவி தினகரன் நக்கலாய் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால்  ஓமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக  கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? 
 
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது, மக்களைப் பற்றி கவலையும்  கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்?! என பதிவிட்டுள்ளார்.