சட்டசபையில் அதிமுகவினரை போட்டுத்தாக்கும் டிடிவி
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டசபைக் கூட்டத்தில், எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அதிமுகவினரை சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது தமிழக சட்டசபை வரும் ஜூலை 9ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் சில கட்சிகள், அமைப்புகள் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து அரசிற்கு நெருக்கடி தர திட்டமிட்டன என முதல்வர் பேசினார்.
இதையடுத்து பேசிய தினகரன் சில கட்சிகள், அமைப்புகள் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து அரசிற்கு நெருக்கடி தர திட்டமிட்டன என ஒரு முதல்வர் கூறுவது அவர் பதவிக்கு அழகல்ல என்றும் காவிரி வழக்கில் நியமித்த வழக்கறிஞர்களைப் போல் ஸ்டெர்லைட் வழக்கிற்கு வழக்கறிஞர்களை நியமிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.
தினகரனை பேசவிடாமல் அதிமுகவினர் தற்பொழுது அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.