செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (14:22 IST)

இனிமேலும் நீங்கள் திருந்தவில்லை என்றால்? - எச்சரிக்கும் தினகரன்

தனக்கு எதிராக நிற்கும் எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் திருந்த வேண்டும். இல்லையேல் அவர்கள் மக்கள் புறக்கணிப்பார்கள் என டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

 
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகனுக்கு, இன்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற எனக்கு வாக்களியுங்கள் என ஆர்.கே.நகர் மக்களிடம் கோரிக்கை வைத்தேன். அதை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். 
 
அதிமுகவிற்கு ரத்தமும், சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கும் 5 பேரின் சுயநலத்தால் அதிமுகவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல், அரசியலில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.
 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும் ” என தினகரன் தெரிவித்தார்.