புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 ஜனவரி 2019 (13:39 IST)

”டார்கெட் 11”: தேர்தலுக்கு தினகரனின் ஸ்கெட்ச் இதுதான்!!

வரும் பாராளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி தனித்தேஎ போட்டியிட முடிவு செய்துள்ளதாம். இதனால் தேர்தலுக்காக இப்போது சில பல திட்டங்களை போட துவங்கிவிட்டாராம் தினகரன். 
 
அதாவது, அனைத்து தொகுதிகளிலும் மல்லுகட்டுவதை விட குறிப்பிட்ட தொகுதிகள் மீது கவனம் செலுத்தி, அதில் வெற்றி பெற ப்ளான் போடப்பட்டுள்ளதாம். தினகரன் 11 தொகுதிகளுக்கு இண்டஹ் பளான் மூலம் குறி வைத்துள்ளாராம். 
 
ஒரு தனியார் நிறுவனம் மூலம் சர்வே நடத்தி இந்த 11 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஆரணி, சேலம், திருப்பூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகியவைதான் அந்த 11 தொகுதிகள்.
 
மேலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தினகரனுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக அந்த சர்வேயில் தெரியவந்துள்ளதாம். அதோடு, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை அமமுக பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.