செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (17:54 IST)

அதுக்கு நான் தூக்குல தொங்கிருவேன்? தினகரன் பொளேர்

டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய போகிறார், திமுகவில் இணைய போகிறார் என்ரெல்லாம் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இவை அனைத்தையும் தெளிவுப்படுத்தும் வகையில் தினகரன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். 
 
தினகரன் கூறியது பின்வருமாறு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் என்றுமே இணையாது. அப்படி இணையவும் வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் 90% அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அதிமுகவில், அமமுக இணைவது தற்கொலை முயற்சி ஆகும்.
 
பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில்தான் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கக் காரணம் திமுகதான். அதேபோன்று இந்த தேர்தலிலும் காங்கிரஸை தனிமைப்படுத்த ஸ்டாலின் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என தெரிவித்தார். 
 
இந்த பேட்டியின் மூலம் அதிமுக, திமுக என இந்த இரு கட்சியுடனும் தினகரன் கூட்டணி வைக்க மாட்டார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.