பிஸ்கட்டில் விஷம் தடவி குழந்தையைக் கொன்ற கொடூரத் தாய் !
சமீபகாலமாக நாட்டில் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த 3 வயது குழந்தையைத் தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூரை அடுத்த சரவணம்பட்டி, கரட்டுமேடு முருகன் கோவில் மலைப்பாதையில் நேற்று காலை வாக்கிங் சென்றவர்கள் அங்குள்ள முட்புதரில் 3 வயதுள்ள பெண் குழந்தையின் சடலம் இருப்பதைப் பார்த்து போலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்,வெள்ளியங்காடு பகுதியில் வசிக்கும் பால்ராஜ் - ரூபினி தம்பதியரின் பெண்குழந்தை தேவிஸ்ரீ என்று தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது :
பால்ராஜ் - ரூபினிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தேவிஸ்ரீ என்ற பெண்குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் குழந்தை மற்றும் மனைவியைவிட்டு பால்ராஜ் பிரிந்து வாழ்ந்துவந்தார்.
இப்படியிருக்க அண்மையில் ரூபினிக்கு, தமிழ் (36) என்பவர் பழக்கமானார்.இருவரும் தனியாக சந்தித்து அதிக நெருக்கமாக இருந்துள்ளனர். இதற்கு குழந்தை இடையூராக இருந்ததால் தேவி ஸ்ரீக்கு பிஸ்கட்டில் விஷம் தடவி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது ரூபினியைக் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இவரது கள்ளக்காதலனான தமிழை போலீஸார் தேடி வருகின்றனர்.