1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (04:40 IST)

தமிழக விவசாயிகள் என்ன அனாதைகளா? விவேக் கொந்தளிப்பு

தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுத்து வருவதால் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது.


 


மேலும் சென்னை மெரீனாவிலும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க முயற்சித்து வருவதால் விவசாயிகளின் பிரச்சனை சிக்கிரமே முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் வடிவேல் தனது டுவிட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்ச்சிமிகு கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: '. விவசாயிகளுக்கு அனைத்து இந்திய ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும். முல்லை பெரியாறு, பவானி ஆறு, தாமிரபரணி ஆறு, காவிரி ஆறு, கண்டலேறு, கிருஷ்ணா ஆறு! எல்லோரும் கைவிட்டுவிட்டால் தமிழகம் வாழ்வது எவ்வாறு? நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை நாம் அநாதைகளாக விட்டுவிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.