வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : சனி, 4 மார்ச் 2017 (08:55 IST)

தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சும் 5 நிறுவனங்களின் பெயர்கள்

தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டது என்று நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு உபயோகமாகவும் தென்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வரும் தாமிரபரணி ஆற்றில் இருந்து எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு தண்ணீர் நாள் ஒன்றுக்கு எடுத்து வருகிறது என்பது குறித்து திருநெல்வேலியை சேர்ந்த ராமைய்யா ஆர்யா என்பவர்  தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டறிந்துள்ளார்.

 

 



இதன்படி கீழ்க்கண்ட ஐந்து நிறுவனங்கள் எடுத்து வரும் தண்ணீரின் அளவு குறித்து  தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

1. ஏசிடி டயர்ஸ் நிறுவனம்  - நாளொன்றுக்கு 9.3 லட்சம் லிட்டர் தண்ணீர்
2. கோகோ கோலா நிறுவனம் - நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர்
3. ராம் கோ இண்டஸ்டரீஸ் நிறுவனம் - நாளொன்றுக்கு 1.2 லட்சம் லிட்டர் தண்ணீர்
4. பெப்சி நிறுவனம் -  நாளொன்றுக்கு 1.1லட்சம் லிட்டர் தண்ணீர்
5. நோவா கார்பரேசன் இந்தியா நிறுவனம் - நாளொன்றுக்கு 95 ஆயிரம் லிட்டர் தண்ணீர்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களை அடுத்து தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட தயாராகி வருகின்றனர்.