செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (09:43 IST)

தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ரூ.100ஐ நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

கடந்த சில நாட்களாக தக்காளி உள்பட காய்கறிகளின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் இன்று தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாயை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதாகவும் இதனால் கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள தக்காளி மிகவும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்ற நிலையில் தக்காளி இன்றியமையாதது என்ற நிலையில் தக்காளியின் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் என்று இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மழை நீடித்தால் 100 ரூபாயை தொட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தக்காளி விலை அதிகரித்தாலும் மற்ற காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயரவில்லை என்றும் பெரிய வெங்காயம் 40 ரூபாய், சின்ன வெங்காயம் 60 ரூபாய், பீட்ரூட் 55 ரூபாய், உருளைக்கிழங்கு 45 ரூபாய் என விற்பனையாகி வருகிறது.


Edited by Siva