செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:23 IST)

தக்காளி விலை மேலும் குறைந்தது.. அதிர்ச்சியில் தக்காளி விவசாயிகள்..!

Tomato
தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 150 முதல் 200 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனையானதால் தக்காளி விவசாயிகளுக்கு பெரும் லாபம் கிடைத்தது என்பதும் லட்சக்கணக்கில் கோடி கணக்கில் தக்காளி விவசாயிகள் சம்பாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக தக்காளி விலை மீண்டும் குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி வரத்து அதிகமானதை அடுத்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு தான் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று 40 ரூபாய்க்கு விற்பனையாக தக்காளி என்று ஐந்து ரூபாய் குறைந்து 35 ரூபாய்க்கு விற்பனை ஆவதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கொள்ளை லாபம் பார்த்த தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மீண்டும் தக்காளி விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் இன்னும் குறையவே அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்றும் வியாபாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.
 
Edited by Siva