செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (10:45 IST)

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை என்ன? இன்னும் குறையுமா?

Tomato
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை ஆகி வந்த நிலையில் படிப்படியாக தக்காளி விலை குறைந்து தற்போது ஒரு கிலோ 50 ரூபாய் என விற்பனை ஆகி வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்றும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததை அடுத்து தக்காளி விலை குறைந்துள்ளதாகவும்  மொத்த விலை 50 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் தக்காளி விலை சில்லறை விற்பனை சந்தைகளில் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் சில்லறை விலையில் ரூ.50 என  விற்பனை ஆகும் என்றும் கூறப்படுகிறது. 
 
தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran