செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (15:50 IST)

டோக்கன் அட்வான்ஸா…முகம் சுளிக்கும் அடிமைகளின் விளம்பர மோகம் – உதயநிதி டுவீட்

பொதுமக்களே முகம் சுளிக்கும் அளவுக்கு அடிமைகளின் விளம்பர மோகம் எல்லை மீறுகிறது என திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

பேரிடரில் வரும் பொங்கல் இது.மக்களுக்கு உதவ வேண்டியது அரசின் தார்மீக கடமை.ஆனால், தலைவர்

அவர்கள் ரூ.5000 கொடுக்கச் சொன்ன பிறகே அடிமைகள் ரூ.2500 பொங்கல் பரிசு அறிவித்தனர்.அதையும் அவர்கள் வீட்டு லாக்கரிலிருந்து கொடுப்பது போல் டோக்கனில் படம் போட்டு விளம்பரம் செய்வது கேவலம்

பொங்கல் பரிசா இல்லை தேர்தலுக்கு வழங்கப்படும் டோக்கன் அட்வான்ஸா என பொதுமக்களே முகம் சுளிக்கும் அளவுக்கு அடிமைகளின் விளம்பர மோகம் எல்லை மீறுகிறது. என்ன செய்தாலும்,  அடிமைகளை மக்கள் நிராகரிக்கப் போவது மட்டும் உறுதி எனப் பதிவிட்டுள்ளார்.