ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (20:56 IST)

உதயநிதியிடம் இன்று நன்கொடை அளித்தவர்களின் விபரங்கள்!

உதயநிதியிடம் இன்று நன்கொடை அளித்தவர்களின் விபரங்கள் குறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் மதியழகன் அவர்கள் இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
குவைத் திமுக சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கான வரைவோலையை அதன் நிர்வாகிகள் மேட்டுவிளை ஜ.ஜானவாஸ் மற்றும் உளுந்தூர்பேட்டை மு.நசிர் அகமது ஆகியோர் இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு நன்றி.
 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சகோதரி சுஷ்மிதா சங்கரி அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.2500-ஐ மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் நன்றிகள்.
 
கல்வி & மருத்துவ பணிகளுக்காக இளைஞரணி அறக்கட்டளைக்கு, நாகை EGS பிள்ளை கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அதன் தலைவர் ஜி.எஸ்.ஜோதிமணி & நிர்வாகிகள் பரமேஸ்வரன், சுமதி பரமேஸ்வரன், விஜயசுந்தரம், சசி,சதிஷ் ஆகியோர் இன்று என்னிடம் வழங்கினர். நன்றி