வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:10 IST)

பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு: கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு!

tamil newyear
பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு: கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வரும் நிலையில் அந்த தமிழ் புத்தாண்டு இன்று தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது
 
தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் இன்று சிறப்பாக தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடி வருகின்றனர் 
 
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என ஒரு சிலர் கூறினாலும் அதனை கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கொண்டாடி வருவது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது
 
இன்று பிலவ ஆண்டு முடிந்து சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்ததை அடுத்து தமிழர்கள் உற்சாகமாக கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்