திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (09:45 IST)

அடுத்த சில மணி நேரங்களில் 6 மாவட்டத்தில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பொழிந்த நிலையில் இன்றும் பல பகுதிகளில் காலையில் இருந்தே மழை தொடர்கிறது.


வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி இன்னும் சில மணி நேரங்களில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதவிர, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், தருமபுரி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடித்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited By: Prasanth.K