ஞாயிறு, 27 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (09:56 IST)

அடுத்த சில மணி நேரங்களில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலாக பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K