வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (09:15 IST)

கோடையில் இதமளிக்கும் மழை; 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்ட போதிலும் அடுத்த சில மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் மழை பெய்ததால் வெயில் தணிந்த குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.