செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்றும் நேற்றைய நிலையிலேயே இன்றும் விற்பனையாக இருப்பதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி சுத்திகரித்து இந்தியாவின் தேவை போக மீதியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதால் பெட்ரோல் டீசல் விலை இப்போது உயர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்தால் இன்னும் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது