1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 மார்ச் 2022 (10:32 IST)

122வது நாளாக உயராத பெட்ரோல் விலை: ஆனால் இன்னும் ஒரே ஒரு நாள் தான்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 11வது நாளாக நீடித்து வருவதாகவும் மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
 
ஆனால் இந்தியாவில் மட்டும் ஐந்து மாநில தேர்தல் நடைபெறுவதால் கடந்த 122 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
ஆனால் நாளையுடன் ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதை அடுத்து நாளை மறுநாள் முதல் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு விலை 25 ரூபாய் வரை விலை ஏற்றம் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது.