1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (08:46 IST)

இன்னும் இரண்டு நாட்களில் எகிறப்போகும் பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இன்னும் இரண்டு நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வரும் 7ம் தேதியுடன் ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதால் எட்டாம் தேதி முதல் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மட்டுமின்றி பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.40 என்றும் டீசல் விலை லிட்டர் ரூ.91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.