செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 ஜூன் 2021 (06:42 IST)

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னை விலை என்ன தெரியுமா?

கடந்த சில மாதங்களாக குறிப்பாக 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் கிட்டத்தட்ட தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தொட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 26 காசுகள் அதிகரித்துள்ளது. அதனால் ஒரு லிட்டர் டீசல் விலை 93.72 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.